என் நினைவுகள்.....!
ஒரு பயணம்! என் நினைவுகள்! அது 1986 அல்லது 1987 ஆண்டாக இருக்க வேண்டும்.எனக்கு ஒரு ஒன்பது வயது இருக்கும். பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது.நான் ஐந்தாம் வகுப்பில் படித்ததாக ஞாபகம். அப்படியெல்லாம் பள்ளி விடுமுறை நாட்களில் அக்கம் பக்கம் எங்கள் வயதை ஒத்த மற்றும் உறவுக்கார குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது ஒரு அலாதியான சந்தோசமான தருணங்கள்.தாயம்,கபடி,கிரிகெட்...வயல் வெளியில் சுற்றி திரிவது ஓடி ஆடி விளையாடுவது, திருடன் போலீஸ் கண்ணாமூச்சி ஆடுவது, அருகில் இருந்த கோவில்களில் விளையாடி திரிவது போன்ற சந்தோசமான நாட்கள் என் அசைவுகளில் iஅவ்வப்போது வந்து பொது உண்டு.அப்போது நான் மற்றும் எனது அத்தை மகனுடன் அந்த வருடம் காஞ்சிபுரம் அருகே உள்ள மாமண்டூர் கிராமத்தில் விடுமுறையை கழித்த நினைவுகளை இப்போது பகிர்தலே என் நினைவுகள்! அந்த மாமண்டூர் கிராமத்திற்கு பயணம் செய்தது எப்படி என்றால் அங்கே எங்களுக்கு சொந்தமான எனது தாத்தா மறைந்த பச்சையப்பாகவுண்டரால் நிர்வகித்து வந்த வாத்து பண்ணைகள் இருந்தன. அந்த பண்ணைக...